செவ்வாய், 15 டிசம்பர், 2009

அல்லாஹ்வுக்கு இணை வைத்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா?



அல்லாஹ்வுக்கு இணை வைத்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா?



அல்லாஹ் கூறுகிறான்:


1. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்க மாட்டான். இதைத் தவிர மற்ற எதையும், தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பான். 4:48, 4:௧௧௬


2. அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை (தடுத்து) ஹரமாக்;கி விடுகிறான். 5:௭௨


3. இணைவைத்த ஆண்கள் பெண்கள் அனைவரையும் அல்லாஹ் தண்டிப்பான். 33:73, 48:௬


மேலும் பார்க்க: (40:11-12, 02:221, 06:64, 06:151, 16:54)


மேற் கூறப்பட்ட வசனங்களில் இணை வைக்கின்ற பாவத்திற்கு மன்னிப்பு இல்லை என்றும் இணை வைக்கின்றவர்களுக்கு சுவர்க்கம் ஹராம், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
எனினும், இந்த வசனங்களை ஆதாரமாகக் கொண்டு உலகில் ஒருவர் இணைவைத்து பின்பு தனது மரணத்திற்கு முன் அப்பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெற நாடினால் அவருக்கும் மன்னிப்பு இல்லையென்ற முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது.


மேலே கூறப்பட்ட வசனங்கள் இணை வைத்த ஒரு மனிதன் உலகில் அல்லாஹ்விடம் மன்னிப்புப் பெறாமல் இணை வைத்த அதே நிலையிலேயே மரணித்து மறுமை விசாரணையின் போது அல்லாஹ்வின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பதனையே பேசுகிறது.


இதனை உறுதிப்படுத்தும் விதமாக பின்வரும் வசனம் அமைந்திருக்கிறது.


4. எவர் தன் இறைவனை சந்திக்க விரும்புகிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தன் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக! 18:௧௧


இந்த வசனத்தில் இணைவைக்கும் மனிதன் தான் மரணித்த பின் அல்லாஹ்வை சந்திக்க விரும்பினால் தான் இணை வைக்கின்ற கொடிய பாவத்தை விட்டு விட்டு நற்செயல்களை புரியுமாறு அல்லாஹ் உத்தரவு பிறப்பிக்கின்றான்.


இதை விட மேலாக…..


இணை வைத்த ஒருவர் உலகத்தில் வாழுகின்ற பொழுது தனது இணை வைக்கும் பாவத்தை உணர்ந்து திருந்தி மன்னிப்புக் கேட்டால், தான் மன்னிப்பதாக அல்லாஹ் பின் வரும் வசனத்தில் எந்த வாதப் பிரதி வாதங்களுக்கும் இடமின்றி தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.


5. ''அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள். அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள். விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, யாரேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால் அவன் (அதற்குரிய) தண்டணையை அடைந்து விடுவான்.


மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவு பட்டவனாக வேதனையில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி விடுவான்.


ஆயினும் (அவர்களில்) எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்து விட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல, அதனை நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.


ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பி விடுகின்றனர்."" (25: 68,69,70,71)


மேற்படி 68ஆவது வசனத்தில் 'அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொருவரையும் வணக்கத்திற்குரியவனாக அழைக்க மாட்டார்கள" என்பதன் மூலம் இணைவைத்தல் ' ஆல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்" என்பதன் மூலம் கொலை ' விபசாரமும் செய்ய மாட்டார்கள்" என்பதன் மூலம் விபசாரம் ஆகிய மூன்று பாவங்களைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான்.


இப்பாவங்களில் முதலாவதாக அல்லாஹ் குறிப்பிடுவது இணைவைக்கும் கொடிய பாவத்தையாகும். எனவே, அல்லாஹ்வின் அடியார்களில் யாரேனும் இணை வைத்தால் அவனுக்கு


- தண்டணை உண்டு.

- மறுமை நாளில் வேதனை இரட்டிப்பாக்கப்படும்.

- மன்னிப்பு இன்றி இழிவுபட்டவனாக வேதனையில் நிரந்தரமாக இருப்பான்.


என்று மேற்படி 68, 69ஆவது வசனங்கள் குறிப்பிடுகிறது. இதே செய்திகளைத் தான் ஏற்கனவே நாம் பார்த்த இணை வைத்தலைப் பற்றி பேசுகின்ற 4:48, 5:72, 33:73 ஆகிய வசனங்கள் சுமந்து நிற்கின்றது.


எனினும் நாம் தற்போது பார்த்து வருகின்ற (25: 68,69,70,71) ஆகிய வசனங்களில் இன்னும் மேலதிகமான தகவல்கள் இருக்கின்றன.


அது தான்…


யாராவது குறிப்பிடப்பட்ட மூன்று பாவங்களில் ஒன்றாகிய இணை வைக்கும் பாவத்தைப் புரிந்து பின்னர் கைசேதப்பட்டு, அப்பாவத்திலிருந்து விலகி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு , நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்கிறாரோ அவரது இணை வைத்த இந்தப் பாவம் மன்னிக்கப்பட்டு நன்மையாக மாற்றப்படுகின்றது என்பதனை 70 ஆவது வசனம் சுட்டிக் காட்டுகின்றது.


அத்துடன் அதற்கடுத்த வசனத்தில் இப்படியான பாவத்தில் சிக்கியிருப்பவர்களை உடனடியாக பாவமன்னிப்பு கேட்பதற்கும் அல்லாஹ் உற்சாகப்படுத்துகிறான்.


எனவே, மிகவும் தெளிவான விடயம் அல்லாஹ்விற்கு இணை வைத்த பாவத்திற்கு, மரணத்திற்கு முன் மன்னிப்பு உண்டு என்பதனை இச்சிறு ஆய்வின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

மௌலவி நஸ்ரி ஜிப்ரி (ஸலபி)

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

9 மாத பாலகனின் தோலில் புனித அல் குர்ஆன் வசனங்கள்.



வாரத்திற்கு இரு தடவைகள் தோன்றும் அதிசயம்.


தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறுவனின் உடலில் குர்ஈன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.

தென் ரஷ்யாவில் செச்னியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் “அல்லாஹ்” என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.

தொடர்ந்து அச்சிறுவனது முதுகு. கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அரபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புனித குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


“திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாக கூறிய மதினா, இதன் போது சிறுவனின் வெப்பநிலை அதிகரித்து அவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.

“இதன் போது எமது மகனை பற்றிப்பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனைத் தொட்டிலிலிலேயே படுக்க வைத்திருப்போம்.அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும” என அவர் மேலும் தெரிவித்தார்.

அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவனது தந்தை, அஹமட் பாஷா அமிராலேவ் விபரிக்கையில், “இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான். எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்” என்று கூறினார்.







வீடியோ பார்க்க http://www.youtube.com/watch?v=Yu5-2l0fz6k
மேலதிக தகவல்களுக்கு

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சீனியர்ஸை மதிப்போம் ஜூனியர்ஸை மிதிக்காமல் இருப்போம்



முஸ்லிம்களின் எதிரிகள முஸ்லிம்களைத் துன்புறுத்துவது மலையேறி முஸ்லிம்களே முஸ்லிம்களைத் துன்புறுத்தும் கொடுமை "பகிடிவதை" என்ற பெயரில் கல்வி கற்கச் செல்லும் இடங்களில் நடந்தேறுகிறது. அன்று அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற கல் நெஞ்சம் படைத்தவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை மறக்க முடியாது.

பிலால் (ரழி) அவர்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைத்து வேதனை செய்யப்பட்டார்கள்.


இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியான சுமையா (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான்.

நெஞ்சை உறுக வைக்கும் இப்படியான வரலாறு இன்று வரை தொடர்கிறது. வேதனைக்குரிய விடயம் என்னவெனில் கல்வி கற்கச் சென்ற எமது முஸ்லிம் சகோதரர்களில் சிலர் ஜூனியர்ஸ் வந்தவுடன் அபூ ஜஹ்ல்களாகஇ உத்பாக்களாகஇ உமையாக்களாகஇ ஷைபாக்களாக உரு மாறுகின்றனர்.

இவர்கள் ஏழு வானங்களுக்கு மேலாலிருந்து நம்மை அவதானித்துக் கொண்டிருக்கும் நம்மைப்படைத்த அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நன்மையையும் தீமையையும் பதிய வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நியமிக்கப்பட்டுள்ள மலக்குமார்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்யப்பட்ட பதிவேடு வழங்கப்பட இருக்கும் மறுமை நாளையும் மறந்து விடக்கூடாது.

நாளை மறுமை நாளில் சுவர்க்கத்தை விட்டும் தூரமாகி நரகில் நுழைவிக்கப்பட இப்"பகிடிவதை" காரணமாக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.


நான் கீழே குறிப்பிடும் அல்குர்ஆன் வசனமும் அல்ஹதீஸ{ம் பகிடிவதை செய்கின்ற முஸ்லிம் சகோதரர்களை விழித்துச் சொல்லப்பட்டது போன்று அமைந்துள்ளது.


அல்லாஹ் கூறுகின்றான்:

"நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாதததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூரையும் தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர"; (33:58)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவரது நாவு, கையின் தொல்லையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார்" (புகாரி – 10, முஸ்லிம் - 65)

அல்லாஹுத்தஆலா பகிடிவதையை அவதூறு என்றும் தெளிவான பாவம் என்றும் வர்ணிக்கிறான். அதே போன்று நாவு, கை இவ்விரு உறுப்புக்களாலும் தான் பகிடிவதை அதிகம் நடக்கிறது.

எனவே, யார் உண்மையான முஸ்லிம் என்பதனைத் தீர்மானிக்கும் செயலாகவும் பகிடிவதை அமைகிறது.
அதாவது யார் பகிடிவதையை மேற்கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார் என்ற கருத்தை மேற்படி ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

ஜூனியர்ஸ் உடன் அன்பாகப் பேசி பெயர் ஊர்களைக் கேட்டு அறிமுகமாகிக் கொள்வது பகிடிவதை அல்ல. ஏசுவது, அடிப்பது, மனம் நோவிப்பது போன்றவை தான் பகிடிவதை.


எனவே, அல்லாஹ் வர்ணிக்கும் இக்கொடிய பாவத்தைத் தவிர்த்து உண்மை முஸ்லிம் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்!!

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

ரமழானில் அல் குர்ஆனோடு நமக்கு இருக்க வேண்டிய தொடர்பு



ங்கள் எல்லோரிடமும் சிறியதொரு கேள்வி.

நாம் அல் குர்ஆனின் மாதத்தில் இருக்கிறோம். இதனை வாசிக்கும் இந்த நிமிடம் வரை அல் குர்ஆனில் எத்தனை ஜுஸ்உகளை ஓதி முடித்திருக்கிறீர்கள்??

இந்தக் கேள்விக்கு உங்களிடம் திருப்தியான பதில் இருந்தால் நீங்கள் ரமழானைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். அல் குர்ஆனை கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பது அர்த்தம்.

திருப்தியான பதில் இல்லாவிட்டால் ரமழானைப் பயன்படுத்த இன்னும் நீங்கள் முன்வரவில்லை. அல் குர்ஆனை கண்ணியப்படுத்தவில்லை.

அல்லாஹ் கூறுகிறான்:

“ரமழான் மாதத்தில் தான் அல் குர்ஆன் இறக்கப்பட்டது.” (2:185)

இந்த வசனத்தை நாம் ஒவ்வொருவரும் அறபு வார்த்தையுடன் தமிழ் அர்த்தத்துடன் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், ஏனைய மாதங்களை விட இம்மாதத்தில் நமக்கும் அல் குர்ஆனுக்கும் இடையில் இருக்க வேண்டிய நெருங்கிய தொடர்பு பற்றி உணர மறந்துவிட்டோம்.

அல் குர்ஆனை ஓதுவது, மனனம் செய்வது, அர்த்தம் விளங்குவது, ஆய்வு செய்வது, நடை முறைப்படுத்துவது முதலியன முஸ்லிம்களாகிய நாம் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களாகும்.
குறைந்த பட்சம் குர்ஆனை ஓதும் விடயத்திலாவது கவனம் செலுத்துகிறோமா என்று பார்த்தால் நம்மில் பலரிடம் திருப்தியான பதில் இல்லை.

“ரமழானில் ஓர் அழைப்பாளர் வந்து கூறுகிறார்,
நன்மையில் நாட்டம் உள்ளவரே! நீர் (நன்மை செய்ய) முன்னே வா. தீமையில் நாட்டம் கொண்டவனே! (தீமை செய்வதை) நிறுத்து.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : திர்மிதி)

இம்மாதத்தில் நன்மைகள் புரிய நாம் முன் வரும் போது ஷைத்தான் தடுக்க முன் வரமாட்டான். தீமைகளைத் தவிர்ந்து கொள்ள முன் வரும் போது அவன் குறுக்கிட மாட்டான். காரணம், அவன் விலங்கிடப்பட்டிருக்கிறான். நமக்குக் கிடைத்த மாபெரும் சந்தர்ப்பம் இந்த ரமழான்.
நன்மைகளைக் கொள்ளையடிக்க மிகச் சிறந்த, இலகுவான வழி அல் குர்ஆனை ஓதுவது என்றால் மிகையாகாது. இதனை உண்மைப்படுத்தும் வகையில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் அதற்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது அது போன்ற மத்து மடங்காகும் “அலிஃப், லாம், மீம்” என்பதை ஒரு எழுத்து என்று கூறமாட்டேன். எனினும் “அலிஃப்” என்பது ஒரு எழுத்து. “லாம்” என்பது ஒரு எழுத்து. “மீம்” என்பது ஒரு எழுத்து” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : திர்மிதி 2910)

நம் பெற்றோர் நாம் சிறு வயதில் இருக்கும் போது பள்ளிக் கூடம் அனுப்பி குர்ஆன் ஓதுவதற்கு கற்றுத் தந்தார்கள். எதற்காக? ரமழான் வந்தும் குர்ஆனை ஓதாமல் பொடுபோக்காக இருக்க வேண்டும் என்பதற்காகவா? ஓதுபவர்களாக நாம் இல்லையெனில் ஓதத் தெரிந்து என்ன பயன்?

நம்மிலுள்ள சில சகோதர சகோதரிகளுக்கு “அல் ஹம்து” சூறாவைக் கூட பார்த்து ஓதத் தெரியாமல் இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கு ஓதத் தெரிந்த நண்பர்கள் இருக்கலாம். இம்மாதத்தைப் பயன்படுத்தி அவர்களை அணுகி ஓதக் கற்றுக் கொள்ள முடியும். நிச்சயம் அவர்கள் மறுக்க மாட்டார்கள். இதற்காக வெட்கப் பட வேண்டியதில்லை. அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதில் நமக்கென்ன வெட்கம்?

அதே போன்று, நீங்கள் ஓரளவு ஓதத் தெரிந்தவர்களாக சிரமப்பட்டு ஓதக் கூடியவர்களாக இருந்தால் “எனக்கு சரியாக ஓதத் தெரியாதே. தப்பித் தவறி பிழையாக ஓதிவிட்டால் அல்லாஹ் தண்டிப்பானோ!” என்றெண்ணி ஓதாமல் இருந்திட வேண்டாம். மாற்றமாக நீங்கள் பாக்கியசாலிகள். ஏனெனில் உங்களுக்கு இரு கூலிகள் கிடைக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“குர்ஆனை நல்ல முறையில் திறமையுடன் ஓதுபவர், நல்லவர்களும் கண்ணியமிக்கவர்களுமான வானவர்களுடன் இருப்பார்கள். குர்ஆனை (இயலாமையால்) சிரமத்துடன் திக்கி திக்கி ஓதுபவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு.”

(புகாரி 4937, முஸ்லிம் 798)

அடுத்து, நேரம் இல்லையென்று யாராவது கருதினால் அது பொய்யாகும். உங்களுக்கு சோலிகள் பல இருக்கலாம். குர்ஆன் ஓதுவதையும் ஒரு சோலியாக நினையுங்கள். அல்லாஹ் உங்களுடன் பேசுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அவன் பேசச் சொல்லி உங்களைக் கேட்டால் நேரம் இல்லையென்று மறுத்து விடுவீர்களா? அல் குர்ஆன் யாருடைய வார்த்தை? முழுக்க முழுக்க நம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனின் வார்த்தை.

உங்களுக்கு இலகுவான ஒரு வழி சொல்லித் தருகிறேன்.
சவூதி குர்ஆன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். ஓவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் இரண்டு தாள்களை (நான்கு பக்கங்கள்) ஓதி வாருங்கள். இவ்வாறு ஓதினால் ஒரு நாளைக்கு பத்து தாள்களை ஓத முடியும். பத்து தாள்கள் என்பது ஒரு ஜுஸ்உ ஆகும். இப்படி ஒவ்வொரு நாளும் ஓதி வந்தால் ரமழான் முடியும் போது முழுக் குர்ஆனையும் ஓதி முடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

நம் முன்னோர்களில் மூன்று நாட்களில், ஏழு நாட்களில், பத்து நாட்களில் எல்லாம் முழுக் குர்ஆனையும் ஓதி முடித்தவர்கள் இருக்கிறார்கள்.
நம்மில் சிலருக்கு இது கடைசி ரமழானாகக் கூட இருக்கலாம்.

எனவே, நீங்கள் ஆர்வம் எடுத்தால் குறைந்த பட்சம் முப்பது நாட்களில் முழுக் குர்ஆனையும் ஓதி முடிக்கலாம். அதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த ரமழானைப் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

ஏக நாயகன் அல்லாஹ் நம் அனைவருக்கும் ஈருலகிலும் வெற்றியைத் தருவானாக!!


வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ரமழானை வரவேற்போம்..

ம் வாழ்வில் இன்னொரு ரமழான் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ ரமழான்கள் நம்மைக் கடந்து சென்று விட்டன. இன்னும் எத்தனை ரமழான்கள் வரை நாம் உயிர் வாழப்போகிறோம் என்பது நமக்குத் தெரியாது.

பாவங்களை விட்டொதுங்கி நன்மைகள் பல புரிந்து அல்லாஹ் விரும்பும் தக்வா உள்ள ஸாலிஹான நல்லடியார்களாக மாறுவதற்கு ரப்புல் ஆலமீன் அல்லாஹ் இந்த மாதத்தில் மட்டும்;; தான், சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்திருக்கிறான்.
‘‘ரமழான் மாதம் நுழைந்ததும் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன.’’ (நூல் : முஸ்லிம்)

ஏனைய எந்த மாதத்திலும் இப்படியொரு சிறப்பு கிடையவே கிடையாது. இம்முறை தவற விட்டால் இன்னும் பதினொரு மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டி வரும். அதற்கிடையில் எத்தனையோ உயிர்கள் இவ்வுலகைப் பிரிய இருக்கின்றன.
எனவே, எதிர் நோக்குகின்ற ரமழானை கூடியளவு பயன்படுத்திக் கொள்ள நம் உள்ளங்களை இப்பொழுதே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமது நேரங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். அமல்கள் புரிய விசேடமான time table ஒன்றை தயார் படுத்திக் கொள்வது நல்லது.
ரமழானில், நோன்பு நோற்பது, நோன்பாளிகளுக்கு இப்தார் செய்ய ஏற்பாடுகளை செய்து கொடுப்பது, தர்மம் செய்வது, கியாமுல் லைல் (தராவீஹ்) தொழுவது, குர்ஆன் ஓதுவது, பிரார்த்தனைகள் புரிவது, தவ்பா கேட்பது, இஃதிகாப் போன்ற எண்ணற்ற அமல்களில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கிறது.
பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் உங்களுக்கு lectures, assignments, presentations, examsஎன்று படிப்புச் சுமைகள் இருப்பது உண்மை. இதைக் காரணமாகக் காட்டி நீங்கள் நல்லமல்களில் ஈடுபடுவது சிரமம் என்று கருதி விடக் கூடாது. அல்லாஹ் அருளும் உன்னதமான இவ்வாய்ப்பை பயன்படுத்துவதில் பொடுபோக்காக இருந்து விடக் கூடாது.

முஸ்லிம்களாகிய நாம் விசேட மாதத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும். எல்லோரும் நோன்பு நோற்கிறார்கள் நாமும் நோன்பு நோற்கிறோம் என்று இல்லாமல் ஈமானுடனும் நன்மையை எதிர்ப்பார்த்தும் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘‘யார் ஈமானுடனும் நன்மையை எதிர்ப்பார்த்தும் ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.’’ (நூல் : புகாரி, முஸ்லிம்)

எனவே, எமது உள்ளங்களில் தனியான ஓர் இடம் இந்த மாதத்துக்காக ஒதுக்குவோம். நல்லமல்கள் புரியக் கூடிய நல்லடியாராக தக்வா உள்ளவர்களாக நம்மை மாற்றக் கூடிய ரமழானை வரவேற்போம்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

முஸ்லிம்களாகிய நாம் யார்?





ல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளாகிய நாம் நமது மார்க்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தெரியாததை தெரிந்து கொள்வதும் தெரிந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்வதும் நமது ஈமான் (விசுவாசம்) உறுதி பெற வழி வகுக்கும்.

முஸ்லிம்களாகிய நாம் ஆறு விடயங்களை ஈமான் (விசுவாசம்) கொண்டிருக்கிறோம்.



 வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நபியாயினும், மலக்காயினும் அல்லாஹ்வுடைய பண்புகளில் எதிலும் ஒப்பாக முடியாது. அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, நல்ல நாமங்கள் உண்டு, பண்புகள் உண்டு ஆனால் அவன் யாருக்கும் ஒப்பானவன் அல்ல. அவனுக்கு நிகராக எதுவும் கிடையாது. அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கின்றான். ஒவ்வொரு இரவும் முதல் வானத்தில் அவனுக்கே உரிய முறையில் இறங்குகின்றான். அல்லாஹ்வை இவ்வுலகில் காணமுடியாது. முஃமின்கள் மாத்திரம் நாளை மறுமையில்; சந்திரனைக் காண்பது போல் அல்லாஹ்வை காண்பார்கள். இவ்வாறு அல்குர்ஆனும், அஸ்ஸ{ன்னாவும் அல்லாஹ்வைப் பற்றிச் சொன்னவற்றை உள்ளபடி ஏற்றுள்ளோம்.



 முஹம்மது நபி ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதராவார்கள். அவருக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் வந்துள்ளார்கள், முஹம்மது நபி ஸல்லல்லாஹ{ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னர் நபிமார்கள் வரமாட்டார்கள். அவர்களோடு மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது. இறைத்தூதர்கள் அனைவரும் மனிதரே, ஆனால் மஃஸ{ம்கள், ஈஸா அலைஹிஸ்ஸலாத்தைத் தவிர அனைவரும் மரணித்துவிட்டார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறுதி நாளின் அடையாளமாக இறங்கிவருவார்கள். பின்னர் நல்லாட்சி செய்து இவ்வுலகில் மரணிப்பார்கள். அவர்கள் தந்தையின்றி இறைவனின் அருளால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிறந்த நபி, அவர் இறைவனின் மகனல்ல, அவனது தூதர், இறைவனிற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மகனென்று கிறிஸ்த்தவர்கள் கூறியதாலேயே காபிர்களானார்கள்.



 மலக்குமார்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் வஹீ கொண்டுவருபவர். பல்லுருவம் எடுக்கக்கூடியவர.;



 அல்குர்ஆன் இறுதி வேதம், அதுவே உலகப் பொதுமறை, இதற்கு முன்னரும் பல தூதர்களுக்கு பல வேதங்கள் கொடுக்கப்பட்டன, தவ்றாத், ஸபூர், இன்ஜீல் என பல வேதங்கள் வழங்கப்பட்டன. அதில் தவ்றாத்தும், இன்ஜீலும் இன்று வரை இருந்தாலும் அதில் திரிபுகள், சேர்க்கைகள், தணிக்கைகள் பல நிகழ்ந்துள்ளன என வேதங்கள் பற்றி அல்குர்ஆனும், அஸ்ஸ{ன்னாவும் எதையெல்லாம் சொல்கிறதோ அவையனைத்தையும் நம்புகின்றோம்.



 மறுமை நாள் ஈமானின் அடிப்படை, மறுமை மரணத்தின் பின் இறைவன் தீர்ப்பளித்து கூலி தரும் நாள் அந்நாளில் இணைவைத்தவர்களை அல்லாஹ் மன்னிக்கவேமாட்டான், மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான் மறுமை பற்றிய அனைத்துச் செய்திகளையும் எந்த வலிந்துரையுமின்றி அல்குர்ஆனும், அஸ்ஸ{ன்னாவும் சொன்னபடி ஏற்றுள்ளோம்.



 கத்ர் (விதி) என்பது இறைவன் ஒன்றை தீர்மானித்தல், எழுதுதல், நாடுதல், படைத்தல் அனைத்தையும் குறிக்கும். இறைவனது விதிப்படியே அனைத்தும் நடக்கும், அவன் நாடாதவைகள் நடக்காது, அவனது நாட்டமின்றி சொர்க்கம் போகவோ, நரகம் போகவோ முடியாது. மனிதனுக்கு தன்னைத் தீர்மானிக்கும் சுதந்திரத்துடனேயே படைக்கப்பட்டுள்ளான். கத்ருடைய முழுமையான விளக்கத்தை அல்லாஹ் மாத்திரமே அறிந்தவன் என கத்ர் பற்றிய அனைத்து ஆதாரபூர்வமான செய்திகளையும் ஏற்றுள்ளோம்.



மேற்சொன்ன எல்லாவற்றையும் ஏற்பவர் இறை விசுவாசியாக முஸ்லிமாக கருதப்படுவார். ஒன்றையேனும் மறுத்த்தவர் இறை நிராகரிப்பாளராக கருதப்படுவார்.