ஞாயிறு, 25 அக்டோபர், 2009

9 மாத பாலகனின் தோலில் புனித அல் குர்ஆன் வசனங்கள்.



வாரத்திற்கு இரு தடவைகள் தோன்றும் அதிசயம்.


தோலில் குர்ஆன் வசனத்துடன் அபூர்வ குழந்தையொன்று பிறந்த சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது. இந்த சிறுவனின் உடலில் குர்ஈன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.

தென் ரஷ்யாவில் செச்னியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் “அல்லாஹ்” என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.

தொடர்ந்து அச்சிறுவனது முதுகு. கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அரபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புனித குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.


“திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாக கூறிய மதினா, இதன் போது சிறுவனின் வெப்பநிலை அதிகரித்து அவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.

“இதன் போது எமது மகனை பற்றிப்பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனைத் தொட்டிலிலிலேயே படுக்க வைத்திருப்போம்.அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும” என அவர் மேலும் தெரிவித்தார்.

அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவனது தந்தை, அஹமட் பாஷா அமிராலேவ் விபரிக்கையில், “இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான். எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்” என்று கூறினார்.







வீடியோ பார்க்க http://www.youtube.com/watch?v=Yu5-2l0fz6k
மேலதிக தகவல்களுக்கு

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

சீனியர்ஸை மதிப்போம் ஜூனியர்ஸை மிதிக்காமல் இருப்போம்



முஸ்லிம்களின் எதிரிகள முஸ்லிம்களைத் துன்புறுத்துவது மலையேறி முஸ்லிம்களே முஸ்லிம்களைத் துன்புறுத்தும் கொடுமை "பகிடிவதை" என்ற பெயரில் கல்வி கற்கச் செல்லும் இடங்களில் நடந்தேறுகிறது. அன்று அபூ ஜஹ்ல், உத்பா, ஷைபா போன்ற கல் நெஞ்சம் படைத்தவர்கள் ஆரம்ப கால முஸ்லிம்களுக்கு செய்த கொடுமைகளை மறக்க முடியாது.

பிலால் (ரழி) அவர்கள் சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி வைத்து வேதனை செய்யப்பட்டார்கள்.


இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியான சுமையா (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான்.

நெஞ்சை உறுக வைக்கும் இப்படியான வரலாறு இன்று வரை தொடர்கிறது. வேதனைக்குரிய விடயம் என்னவெனில் கல்வி கற்கச் சென்ற எமது முஸ்லிம் சகோதரர்களில் சிலர் ஜூனியர்ஸ் வந்தவுடன் அபூ ஜஹ்ல்களாகஇ உத்பாக்களாகஇ உமையாக்களாகஇ ஷைபாக்களாக உரு மாறுகின்றனர்.

இவர்கள் ஏழு வானங்களுக்கு மேலாலிருந்து நம்மை அவதானித்துக் கொண்டிருக்கும் நம்மைப்படைத்த அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும். நன்மையையும் தீமையையும் பதிய வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நியமிக்கப்பட்டுள்ள மலக்குமார்களை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்யப்பட்ட பதிவேடு வழங்கப்பட இருக்கும் மறுமை நாளையும் மறந்து விடக்கூடாது.

நாளை மறுமை நாளில் சுவர்க்கத்தை விட்டும் தூரமாகி நரகில் நுழைவிக்கப்பட இப்"பகிடிவதை" காரணமாக அமைந்து விடக்கூடாது. அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.


நான் கீழே குறிப்பிடும் அல்குர்ஆன் வசனமும் அல்ஹதீஸ{ம் பகிடிவதை செய்கின்ற முஸ்லிம் சகோதரர்களை விழித்துச் சொல்லப்பட்டது போன்று அமைந்துள்ளது.


அல்லாஹ் கூறுகின்றான்:

"நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் செய்யாதததைக் கூறி துன்புறுத்துவோர் அவதூரையும் தெளிவான பாவத்தையும் சுமந்து விட்டனர"; (33:58)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"எவரது நாவு, கையின் தொல்லையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிம் ஆவார்" (புகாரி – 10, முஸ்லிம் - 65)

அல்லாஹுத்தஆலா பகிடிவதையை அவதூறு என்றும் தெளிவான பாவம் என்றும் வர்ணிக்கிறான். அதே போன்று நாவு, கை இவ்விரு உறுப்புக்களாலும் தான் பகிடிவதை அதிகம் நடக்கிறது.

எனவே, யார் உண்மையான முஸ்லிம் என்பதனைத் தீர்மானிக்கும் செயலாகவும் பகிடிவதை அமைகிறது.
அதாவது யார் பகிடிவதையை மேற்கொள்ளாமல் இருக்கிறாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார் என்ற கருத்தை மேற்படி ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

ஜூனியர்ஸ் உடன் அன்பாகப் பேசி பெயர் ஊர்களைக் கேட்டு அறிமுகமாகிக் கொள்வது பகிடிவதை அல்ல. ஏசுவது, அடிப்பது, மனம் நோவிப்பது போன்றவை தான் பகிடிவதை.


எனவே, அல்லாஹ் வர்ணிக்கும் இக்கொடிய பாவத்தைத் தவிர்த்து உண்மை முஸ்லிம் என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டு இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்!!